"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Curry Leaf Tree Part Three – கறிவேப்பிலை

Curry Leaf Tree Part Three- கறிவேப்பிலை மரம் [பகுதி 3]

மரங்களைப்பற்றிய தொடர் பதிவில் மதுரமான வாசனையை கொடுக்கும் கறிவேப்பிலை மரத்தைப்பற்றி தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.

இதன் முந்தைய பதிவான முதல் பதிவில் [Part 1] கருவேப்பிலையைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள், தாவரத்தின் தன்மை மற்றும் இலைகளின் தன்மைகளைப்பற்றி பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாகிய இரண்டாவது பதிவில் [Part 2] பூக்களின் தன்மை, காய், கனிகளின் தன்மைகளுடன் பழங்களில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும் பார்த்தோம்.

இப்போது பார்த்துக்கொண்டிருப்பது மூன்றாவது பகுதி [Part 3].

Curry Leaf

இந்த மூன்றாவது பகுதியில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கருவேப்பிலை இலைகளில் அடங்கியுள்ள சத்துக்கள், அது குணப்படுத்தும் நோய்கள், மருந்து தயாரிக்கும் முறைகள் ஆகியவற்றை பார்க்க இருக்கின்றோம்.

கருவேப்பிலையில் உடலுக்கு அதிக அளவில் நன்மைபயக்கும் சத்துக்கள் உள்ளன என்றாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில மூலக்கூறுகளும் உள்ளன. அதனைப்பற்றியும் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

கருவேப்பிலை மரத்தின் இலைகளில் உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

இலைகளில் அடங்கியுள்ள சத்துக்கள், அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ஆல்கலாய்டுகளைப் பற்றி ஒரு அட்டவணைமூலம் பார்ப்போம்.

English NameTamil Name
beta-Pineneபீட்டா பினீன்
alpha-Pineneஆல்பா பினீன்
beta-Caryophylleneபீட்டா-கேரியோபிலீன்
beta-Phellandreneபீட்டா-பெல்லன்ட்ரீன்
beta-sitosterolபீட்டா-சிட்டோஸ்டெரால்
O-methyl murrayamine AO-மெத்தில் முர்ரமைன் A
O-methyl mahanineO-மெத்தில் மகானைன்
Calciumசுண்ணாம்பு சத்து
Magnesiumமக்னீசியம்
Ironஇரும்பு
Copperதாமிரம்
Phosphorusபாஸ்பரஸ்
Sulphurகந்தகம்
Chromiumகுரோமியம்
Chlorineகுளோரின்
Carbazoleகார்பஸோல்
cyclomahanimbineசைக்ளோமஹானிம்பைன்
Scopolinஸ்கோப்போலின்
Proteinபுரதம்
Fatsகொழுப்பு
Fiberநார்ச்சத்து
Vitamin A [beta-carotene]வைட்டமின் A [பீட்டா கரோட்டின்]
Vitamin B1 [thiamine]வைட்டமின் B1 [தயாமின்]
Vitamin B2 [riboflavin]வைட்டமின் B2 [ரிபோ ஃப்ளவின்]
Vitamin B3 [niacin]வைட்டமின் B3 [நியாசின்]
Vitamin B9 [folic acid]வைட்டமின் B9 [ஃபோலிக் அமிலம்]
Vitamin C [ascorbic acid]வைட்டமின் C. [அஸ்கார்பிக் அமிலம்]
Vitamin Eவைட்டமின் E
Isomahanineஐசோமஹனைன்
Isomurrayazolineஐசோமுர்ரயஸோலைன்
Isomurrayazolinineஐசோமுர்ரயாசோலைனின்
Koenineகோயினின்
Koenidineகோனிடின்
Koenigineகோயினிஜின்
Koenimbineகோயின்பைன்
Mahanimbinineமஹானிம்பினைன்
Mahanimbolineமஹானிம்போலைன்
Mahanimbinolமஹானிம்பினோல்
Mahanimbicineமஹானிம்பிஸைன்
Mahanineமஹானைன்
Mukonicineமுகோனைஸின்
Mukoeic acidமுகோயிக் அமிலம்
mukolineமுகோலைன்
Mukolidineமுகோலைடின்
Mukonineமுகோனைன்
Mukonidineமுகோனிடின்
Murrayacinineமுர்ரயசைனைன்
Murrayazolinineமுர்ரயாசோலைனின்
Murrayalineமுர்ரயலைன்
Murrayanineமுர்ரயனைன்
Murrayanolமுர்ரயனோல்
Murrayone imperatoxinமுர்ரேயோன் இம்பெராடாக்சின்
Glycozolineகிளைகோஸோலைன்
methyl carbazoleமெத்தில் கார்பஸோல்
Oleoresinஒலியோரெசின்
Asparagineஅஸ்பாரஜின்
Serine amino acidசெரைன் அமினோ அமிலம்
Aspartic acidஆஸ்பார்டிக் அமிலம்
Oxalic acidஆக்சாலிக் அமிலம்
Alanineஅலனைன்
Prolineபுரோலின்
Cinnamaldehydeசின்னமால்டிகைடு
Girinimbineகிரினிம்பைன்
Girinimbilolகிரினிம்பிலோல்
Koenolineகோயினோலைன்
Bismahanineபிஸ்மஹனைன்
Phebalosinஃபெபாலோசின்
Mahanimbineமஹானிம்பைன்
Pypayafoline carbazoleபைபயாஃபோலின் கார்பசோல்
Xynthyletinசைந்திலெடின்

Curry Leaf Tree – கறிவேப்பிலை. உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் கருவேப்பிலையை ஒதுக்காமல் உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி பசியுடன் நல்ல ஜீரணசக்தியை கொடுக்கும்.

இலையை கஷாயம் செய்து அருந்த வாந்தி நிற்கும். மேலும் உடலுக்கு வலுவைத்தரும். பித்தத்தை கண்டித்து உடல் சூட்டை தணிக்கும்.

வெயில் காலங்களில் ஏற்படும் கட்டிகளுக்கு கருவேப்பிலையை அரைத்து பூச குணம் கிடைக்கும்.

கருவேப்பிலையை துவையலாகவோ அல்லது பொடியாகவோ சாதத்துடன் சேர்த்துவர கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோய் வராமல் தடுக்கும்.

இளைஞர்களை வாட்டி எடுக்கும் தலையாய பிரச்சனையான இளநரையை தடுத்து நிறுத்துவதில் இது முதன்மையானது. முடி கொட்டுவதிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.

இளமை தளும்பும் வழுவழுப்பான தோல்களையும் தருகிறது.

சுவையின்மை, மந்தம், மலக்கட்டு, நாட்பட்ட சுரம், பிரமேகம், அம்மைத்தழும்பு, கிரகணி, தலைவலி, வீக்கம், தாகம், அரிப்பு, சூலைநோய் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கிறது.

இதன் இலை, வேர், பட்டை முதலியவற்றை கஷாயமாக செய்து அருந்த பித்தத்தை நீங்குவதுடன் அதனால் ஏற்படுகின்ற வாந்தியையும் நிறுத்துகிறது.

Curry Leaf Tree Stems

கருவேப்பிலையை அம்மியில் மையாக அரைத்து சுண்டைக்காயளவு சாப்பிட்டுவர வயிற்றுவலி நீங்கும். இரத்தம் சுத்தமாகும். இதையே நெல்லிக்காய் அளவு இருவேளை மூன்றுநாள் தொடர்ந்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

கறிவேப்பிலை பொடியை 3 டீஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு வெந்நீர் அருந்தவும். இதனால் சூதக வாய்வு, நீர்க்கோவை நீங்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை நன்றாக மென்று தின்று நீர் குடித்துவர உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் குறையும். தொப்பை கரையும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராகும். வாய்கசப்பு நீங்கும், வாயு தொல்லை அகலுவதோடு உடல் பருமனும் குறையும்.

கருவேப்பிலையை எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து பசைபோலாக்கி தலையில் தடவி அரைமணிநேரம் ஊறவிட்டு குளித்துவர பேன், பொடுகு தொல்லைகள் நீங்கும். முடியும் செழித்து வளரும்.

இதிலுள்ள கந்தகம் பித்தநீர் சுரப்பு தடையின்றி சுரக்க உதவுகிறது. குளோரின் உப்பானது உடலில் அதிக அளவில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்கிறது. பொட்டாசியம் ஜீரணநீர்கள் தடையின்றி உற்பத்தியாக உதவுகிறது.

இதில் பாஸ்பரஸ் தேவையான அளவு உள்ளதால் மூளைக்கு பலம் சேர்த்து ஞாபக சக்தியை மேம்படுத்தும். மக்னீசியம் சத்தும் போலிக் அமிலமும் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது.

இதிலுள்ள “முராயாசினின்” (Muehinie) என்னும் வேதிப்பொருள் கிருமி நாசினியாகவும், பூஞ்சை காளான் கொல்லியாகவும் செயல்படுகின்றன.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து ஒரு கொட்டைப்பாக்கு அளவு காலை, மாலை மூன்றுநாட்கள் தொடர்ந்து சாப்பிட உள்சூடு அகன்று சீதபேதி குணமாகும்.

கண்களுக்கு குளிர்ச்சி தரும் கருவேப்பிலையில் “வைட்டமின் A” தாராளமாக உள்ளதால் பார்வைத்திறனை மேம்படுத்துகிறது.

வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலையை மென்று சாப்பிட்டுவரலாம்.

இதன் இலைகளில் “ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்” (Antioxidants) நிறைந்துள்ளதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

கருவேப்பிலையிலுள்ள “கிரினிம்பைன்” (Girinimbine) என்னும் ஆல்கலாய்டு ஈரல் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.

இதன் இலை மற்றும் விதைகளிலிருந்து வாசனை ததும்பும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய்யானது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் திறனை பெற்றுள்ளது.

Curry Leaf Tree – கறிவேப்பிலை பயன்படுத்தி பல மருந்துகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. அவைகளில் தயாரிப்பதற்கு எளிதான சிலவற்றைப்பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.

  • கறிவேப்பிலை – 50 கிராம்.
  • பெருங்காயம் – 50 கிராம்.
  • சுக்கு – 50 கிராம்.
  • திப்பிலி – 25 கிராம்.
  • சீரகம் – 25 கிராம்.
  • இந்துப்பு – 25 கிராம்.

மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை வெயிலில் நன்றாக காயவைத்து பின் தனித்தனியாக உரலிலிட்டு இடித்து சலித்து பின் எல்லவற்றையும் ஒன்றாக கலந்து மீண்டும் ஒருமுறை சலித்தெடுத்து காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

இதுவே கருவேப்பிலை ஜீரணப்பொடி.

சாதத்துடன் 1 டீஸ்பூன் அளவு  பொடியை கலந்து இதனுடன் சிறிது பசுநெய்யும் சேர்த்து பிசைந்து சாப்பிட உடல் வலிமை பெறும். ஜீரண சக்தி அதிகரிக்கும். நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். உடல் வெப்பத்தை தணிக்கும். பித்தம் அகலும். நன்கு பசியும் எடுப்பதோடு ஆரோக்கியமும் மேம்படும். ஆயுளும் விருத்தியாகும்.

கறிவேப்பிலையுடன் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். இதனை அம்மி அல்லது மிக்ஸியில் போட்டு போதிய அளவு நீர்விட்டு துவையலாக அரைக்கவும்.

Karuveppilai curry thuvaiyal

இது உண்மையாகவே அடிபொழியாக இருக்கும்.

இதனை உணவுடன் கலந்து சிறிது நெய்யும் விட்டு சாப்பிட வாய்கசப்பு, வாய்நீர் ஊறல், பித்தம், அரோசகம், அதிசாரம், பித்த வாந்தி, செரியாமை, வயிற்றுப் பொருமல், வயிற்றுளைச்சல் முதலியன குணமாகும்.

சிலருக்கு சாப்பிட்ட உடனேயே மலங்கழிக்கவேண்டும் என்கின்ற உணர்வு வரும். அப்படியானவர்கள் மேற்கண்ட துவையலை சாதத்தில் கலந்து உண்டுவர மேற்கண்ட பிரச்சனைகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.

இந்த துவையலை அடிக்கடி உணவில் சேர்த்துவர செம்பட்டை முடி கருமையடையும். வறண்ட தோல்கள் வறட்சி நீங்கி பளபளப்படையும். வாய்கசப்பு, பித்தம் நீங்குவதோடு பசியின்மையும் போயேபோச்சு.

  • ஈர்க்கு (கறிவேப்பிலை இலையின் நடுத்தண்டு) – 25 கிராம்.
  • சுக்கு – 25 கிராம்.
  • சீரகம் – 25 கிராம்.
  • ஓமம் – 25 கிராம்.

மேற்கண்ட நான்கு பொருட்களையும் 2 படி தண்ணீரில் போட்டு கால் படியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து இருவேளை அருந்த அஜீரண வாயு அகலும்.

  • கறிவேப்பிலை சாறு – 6 அவுண்ஸ்.
  • கற்பூரவள்ளி இலை சாறு – 6 அவுண்ஸ்.
  • தேங்காய் எண்ணெய் – 12 அவுண்ஸ்.
  • கருஞ்சீரகம் – 25 கிராம்.

மேற்குறிப்பிட்ட நான்கு சரக்குகளையும் ஒன்று கலந்து சிறு விறகால் கருஞ்சீரகம் கருகாதவண்ணம் தைலபதமாக காய்ச்சி வடித்து ஆறியபின் பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

இதனை தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவிட்டு குளித்துவர தலைகுத்து, ஒருதலைக்குத்து முதலியன குணமாகும்.

கருவேப்பிலையை காயவைத்து இடித்தெடுத்துக்கொள்ளவும். இந்த பொடி 1 தேக்கரண்டி அளவும் இதனுடன் சோம்பு பொடி அரை தேக்கரண்டி அளவும் சேர்த்து ஒரிஜினல் பன்னீர்விட்டு குழைத்து பருக்களின்மேல் பூசிவர பருக்கள் காய்ந்து உதிர்ந்துவிடுவதோடு பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மாறிவிடும்.

சிலருக்கு அம்மை நோயினால் முகத்தில் புள்ளி புள்ளியாக வடுக்கள் தோன்றி இருக்கும். முகத்தின் அழகை கெடுக்கும் இவ்வடுக்களை நீக்கி முகத்தை பொலிவுற செய்ய கருவேப்பிலை கைகொடுக்கிறது.

  • கறிவேப்பிலை – 1 கைப்பிடி.
  • கசகசா – 15 கிராம்.
  • கஸ்தூரி மஞ்சள் – 8 கிராம்.

இம்மூன்றையும் சுத்தமான கல்வத்திலிட்டு மைபோல் அரைத்தெடுத்துக் கொள்ளவும். இதனை முகத்தில் நன்கு தடிமனாக பூசி 20 நிமிடம் ஊறவிட்டு அதன்பின் வெந்நீரால் கழுவி விடவும். இவ்வாறு காலையும் மாலையும் தொடர்ந்து செய்துவர தழும்புகள் படிப்படியாக மறைந்துபோகும்.

இந்த கருவேப்பிலையில் பல நன்மைகள் உள்ளது என்றாலும் சில தீமைகளும் உள்ளன. ஆனால் இந்த தீமைகள் எளிதாக நிவர்த்தி செய்யக்கூடியதே.

வாருங்கள்… இதனால் உடலுக்கு ஏற்படும் தீமைகளையும், அதனை நிவர்த்தி செய்யும் முறைகளையும் பார்ப்போம்.

கருவேப்பிலைகளை அரைத்து துவையலாகவோ அல்லது பொடியாகவோ சாதத்தில் விட்டு பிசைத்து கிருஷ்ணா என்று மூக்குமுட்ட அடிப்பதற்கு முன்னால் அதில் ஒரு கரண்டி “நெய்” சேர்த்து கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம்.

Curry Leaf Power

இது எதற்கு தெரியுமா?

இந்த கருவேப்பிலையானது நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை செய்தாலும்கூட அதிக அளவில் சாப்பிடும்போது ஒருசில தீமைகளையும் செய்கிறது அதில் ஒன்று “குடல் வறட்சி“. அதாவது உங்கள் குடல் ஈரப்பதத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் திறனை இழந்துவிடுகிறது.

இதனால் வயிற்றில் சில அசௌவ்கரியங்கள் ஏற்படுவதோடு இயல்பாக மலம் கழிப்பதிலும் சில பிரச்சனைகள் ஏற்படும்.

இதிலிருந்து தப்பிக்க கருவேப்பிலையை துவையலாகவோ, பொரியலாகவோ, பொடிகளாகவோ உணவில் சேர்த்துக்கொண்டால் கூடவே 1 டீஸ்பூன் நெய்யும் சேர்த்துக்கொண்டு நெய்மணம் கமழ கமழ சாப்பாட்டை ஒருபிடி பிடியுங்கள். குடல் வறட்சியிலிருந்து எளிதில் தப்பிக்கலாம். மலமும் எளிதாக கழியும். பிராபளம் சால்வ். மறுநாள் காலையில் உங்கள் முகம் சகல ஐஸ்வர்யங்களுடன் மலர்ச்சியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!